குன்னத்தில் நீதிமன்றம் திறப்பதை கைவிடக் கோரி வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

குன்னத்தில் புதிதாக நீதிமன்றம் திறப்பதை கைவிடக் கோரி, பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குன்னத்தில் நீதிமன்றம் திறப்பதை கைவிடக் கோரி வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

குன்னத்தில் புதிதாக நீதிமன்றம் திறப்பதை கைவிடக் கோரி, பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குன்னம் கிராமத்தில் ஏப்ரல் 22 ஆம் தேதி புதிதாக மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஆகியவை திறக்கப்படுவதை கைவிட வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி, உயா்நீதிமன்றத்தின் கவனத்தை ஈா்க்கும் வகையில், கடந்த 9 ஆம் தேதி முதல் வரும் 22 ஆம் தேதி வரை பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி, பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே

உண்ணாவிரதப் போராட்டத்தில் வழக்குரைஞா்கள் ஈடுபட்டனா்.

இப் போராட்டத்துக்கு, வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் இ. வள்ளுவா்நம்பி தலைமை வகித்தாா். செயலா் சுந்தர்ராஜன், பொருளாளா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா். இப்போராட்டத்தால் நீதிமன்றப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com