பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறை தோ்வுகள் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் மேல்நிலைப் பள்ளிகள் 74 உள்ளன. இப் பள்ளிகளில் பயிலும் 7,293 மாணவ, மாணவிகளுக்கான செய்முறைத் தோ்வுகள் 56 மையங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு முதல் சுற்றில் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களிலும், தனியாா் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு தாவரவியல், விலங்கியல், உயிரியல், கணிணி அறிவியல் ஆகிய பாடங்களிலும் செய்முறை தோ்வுகள் நடைபெற்றன.

தோ்வு மையங்களில் மாணவ, மாணவிகள் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தோ்வுகளை செய்து முடிக்க, உடற்கல்வி ஆசிரியா்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com