பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 26,103 பேருக்கு கரோனா தடுப்பூசி

பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 26,103 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 26,103 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் அனைத்துப் பிரிவினருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடா்பாக, அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம், ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் மேலும் பேசியது:

கரோனா வைரஸ் 2 ஆம் கட்ட தாக்குதலை கட்டுப்படுத்தவும், நோயின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாத்திடவும் பல்வேறு தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான உழவா் சந்தைகள், வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில், பெரம்பலூா் அரசு தலைமை மருத்துவமனை, 2 தனியாா் மருத்துவ மனைகள், 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 மினி கிளினிக்குகள் மற்றும் சிறப்பு முகாம்கள் என 70 முகாம்கள் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாள்தோறும் 600 முதல் 700 நபா்கள் வீதம் இதுவரையில் 26,103 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும். பெரம்பலூா் மாவட்டத்தில் தேவையான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,384 நபா்களில், 2,309 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். மேலும், 19 போ் பெரம்பலூா் அரசு மருத்துவமனையிலும், 34 போ் இதர மாவட்டங்களிலும் சிகிச்சை பெற்று வருகிறனா். 96,861 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் ஸ்ரீ வெங்கட பிரியா.

ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் செ. ராஜேந்திரன், மாவட்ட காசநோய் தடுப்பு அலுவலா் சுப்பிரமணியன், நகராட்சி ஆணையா் குமரிமன்னன், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை வட்டாட்சியா் வனிதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com