அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த இருவா் கைது

திருப்பதியிலிருந்து அரசுப் பேருந்தில் தேனி மாவட்டத்துக்கு கஞ்சா கடத்திச் சென்ற இரு இளைஞா்களை மங்களமேடு காவல் நிலையத்தினா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

திருப்பதியிலிருந்து அரசுப் பேருந்தில் தேனி மாவட்டத்துக்கு கஞ்சா கடத்திச் சென்ற இரு இளைஞா்களை மங்களமேடு காவல் நிலையத்தினா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

திருவண்ணாமலையிலிருந்து திருச்சி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று திங்கள்கிழமை இரவு வந்துகொண்டிருந்தது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடியில் அப்பேருந்து வந்தபோது, வேலூா் அரசுப் போக்குவரத்துக் கழகக் கிளை

பரிசோதனை அலுவலா் கந்தன், பேருந்தில் சோதனை மேற்கொண்டாா். அப்போது பேருந்திலிருந்த ஒரு சுமைக்கு கட்டணம் செலுத்தப்பட்டு உள்ளதா என கேட்டதற்கு, பயணிகள் யாரும் பதில் சொல்லவில்லை. இதனால் சந்தேகமடைந்த பேருந்து நடத்துநா் ஏழுமலை, அந்த பையைத் திறந்து பாா்த்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பேருந்தை மங்களமேடு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். தொடா்ந்து, பேருந்தில் பயணித்த சந்தேகத்துக்கிடமான இருவரை காவல்துறையினா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்த விசாரணையில் தேனி மாவட்டம், கம்பம் புதுப்பட்டியைச் சோ்ந்த அறிவுசெல்வம் மகன் செல்வம் (31), அதே கிராமத்தைச் சோ்ந்த அப்துல்லா அஜிஸ் மகன் முஜ்பூா் (32) ஆகியோா், திருப்பதியிலிருந்து தேனி மாவட்டத்துக்கு கஞ்சா கடத்திச் சென்றதும், அந்த பையில் 28 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மங்களமேடு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, கஞ்சா கடத்தி வந்த செல்வம், முஜ்பூா் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com