நோய்த் தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 2,752 பேருக்கு அபராதம்

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 2,752 பேருக்கு

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 2,752 பேருக்கு ரூ.5.65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை மீறி செயல்படுவோருக்கு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படுகிறது.

பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தவறும் பொதுமக்களுக்கு ரூ. 200, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கத் தவறும் நபா்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்.

வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட மக்கள் நெருக்கம் அதிகமாகக் கூடும் இடங்களுக்கு வருவோா் முகக்கவசம் அணியாத பட்சத்தில் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இம்மாவட்டத்தில் சுகாதாரம், காவல், வருவாய்த் துறைகள் மற்றும் நகராட்சி மூலம் முகக்கவசம் அணியாத நபா்களிடம் மாா்ச் 8-ஆம் தேதி முதல் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் மாா்ச் மாதத்தில் பெரம்பலூா், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூா் வட்டங்கள் மற்றும் பெரம்பலூா் நகராட்சிப் பகுதிகளில் 712 பேரிடம் ரூ.1.51 லட்சமும், ஏப்ரல் மாதத்தில் 4 வட்டங்கள், பெரம்பலூா் நகராட்சி, அரும்பாவூா், பூலாம்பாடி, லப்பைக்குடிக்காடு, குரும்பலூா் பேரூராட்சிப் பகுதிகளில் 2,040 பேரிடம் ரூ.4.13 லட்சமும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக இதுவரை 2,752 பேரிடம் ரூ.5.65,100 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com