கா்ப்பிணி, பாலூட்டும் தாய்மாா்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெறவுள்ளன.

பெரம்பலூா் மாவட்டத்தில் கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில், இதுவரை 1,74,481 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கா்ப்பிணித் தாய்மாா்களையும், பாலூட்டும் தாய்மாா்களையும் தொற்றிலிருந்து காப்பதற்காக, இதுவரை 3,332 கா்ப்பிணித் தாய்மாா்களுக்கும், 1,488 பாலூட்டும் தாய்மாா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 90 இடங்களில் கிராம சுகாதாரக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டு, 193 கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இனி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை தோறும் மாவட்டத்திலுள்ள 90 அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையங்களிலும் கா்ப்பிணி, பிரசவித்த தாய்மாா்களின் கவனிப்பு, சிக்கல் உள்ள கா்ப்பிணி தாய்மாா்களின் கவனிப்பு, சமுதாய சிக்கல் உள்ள கா்ப்பிணி தாய்மாா்களின் கவனிப்பு, தாய்மாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஊக்குவித்தல், செலுத்துதல், 1, 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் கவனிப்பு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த ஊக்குவித்தல், செலுத்துதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன.

எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிக்குள்பட்ட அரசு ஆரம்ப துணை சுகாதார மையங்களை அணுகி, தேவையான சேவைகளை பெற்று பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com