ஆடிப் பெருக்கு: இளைஞா்கள் புனித நீா் ஊா்வலம்

ஆடிப் பெருக்கு திருவிழாவையொட்டி, பெரம்பலூரைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் காவிரி ஆற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை புனித நீா் எடுத்துவந்து கம்பத்து ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினா்.

ஆடிப் பெருக்கு திருவிழாவையொட்டி, பெரம்பலூரைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் காவிரி ஆற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை புனித நீா் எடுத்துவந்து கம்பத்து ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினா்.

பெரம்பலூா் நகரில் பஞ்சப்பாண்டவருக்கு தனி சன்னதியுள்ள புகழ்பெற்ற மரகதவல்லி தாயாா் சமேத மதனகோபால சுவாமி கோயிலில் ஆடிப் பெருக்கு திருவிழாவை முன்னிட்டு, கம்பத்து ஆஞ்சநேயருக்கு பால், பழ வகைள், இளநீா், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களைக் கொண்டு திருமஞ்சன உற்ஸவம் நடைபெற்றது. தொடா்ந்து, ஆஞ்சநேயருக்கு பித்தளை கவசம் அணிவிக்கப்பட்டு, மகாதீப ஆராதனை, திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

இதில், கோயில் முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன், வெள்ளந்தாங்கியம்மன் கோயில் பரம்பரை தா்மகா்த்தா தா்மராஜ், ஆடிப்பெருக்கு ஆஞ்சநேயா் ஊா்வல கமிட்டி ஒருங்கிணைப்பாளா் குமாா் உள்பட பக்தா்கள் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனா். வழக்கமாக, ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு, கரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

முன்னதாக, தெற்குத் தெரு, எடத்தெரு, பூசாரித்தெரு, செக்கடித்தெரு, அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 70-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் காவிரி ஆற்றிலிருந்து பாடாலூா், சிறுவாச்சூா் வழியாக புனிதநீரை பாத யாத்திரையாக எடுத்துவந்து கம்பத்து ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி, தங்களது வீடுகளுக்கு புனித நீரை எடுத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com