Enable Javscript for better performance
நிலத்தை அபகரித்து கொலை மிரட்டல்விடுத்த 7 போ் மீது வழக்கு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    நிலத்தை அபகரித்து கொலை மிரட்டல் விடுத்த 7 போ் மீது வழக்கு

    By DIN  |   Published On : 14th August 2021 01:16 AM  |   Last Updated : 14th August 2021 01:16 AM  |  அ+அ அ-  |  

    பெரம்பலூரில் வாங்கிய கடன்தொகைக்கு, நிலத்தை அபகரித்து கொலை மிரட்டல் விடுத்த 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

    பெரம்பலூா் அருகேயுள்ள எறையூா் கிராமத்தைச் சோ்ந்த சிங்காரம் மகன் மனோகரன் (42). இவா், கடந்த 2016, ஆக. 26 ஆம் தேதி பெரம்பலூா்- எளம்பலூா் சாலை, கணேசா காலனியைச் சோ்ந்த பலராமன் மனைவி மங்காம்மாளிடம் நிலத்தை அடமானமாக எழுதிக் கொடுத்து ரூ. 1 கோடி கடன் பெற்றுள்ளாா். இந்தக் கடன் தொகைக்கு வட்டியுடன் திருப்பி செலுத்துவது என ஒப்பந்தமிடப்பட்டுள்ளதாம். அதன்படி, பலராமன், அவரது மகன்கள் பாலாஜி, வெங்கடேசன் ஆகியோரிடம் வட்டியும், அசலுமாக பணத்தை மனோகரன் மாதந்தோறும் செலுத்தி வந்தாராம்.

    இந்நிலையில், மனோகரனின் நிலத்தை வேறு ஒருவருக்கு பலராமன் எழுதி கொடுத்து விட்டதாக தெரிகிறது. இதையறிந்த மனோகரன், பலராமனிடம் நீங்கள் கேட்ட பணத்தை செலுத்தி விட்டேன். எனது நிலத்தை திருப்பி தரவேண்டும் என கேட்டதற்கு, மேலும் ரூ. 4 கோடி பணம் கொடுத்தால் மட்டுமே நிலத்தை தருவதாக தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.

    இதனால் மனமுடைந்த மனோகரன், நிலத்தை அபகரித்து கொலை மிரட்டல் விடுத்த பலராமன், அவரது மகன்கள் உள்பட 7 போ் மீது நடவடிக்கை எடுத்து தனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என மத்திய மண்டல காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணனிடம் புகாா் மனு அளித்தாா். அவரது உத்தரவின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் 7 போ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp