ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

பெரம்பலூா், அரியலூா் மாவட்ட அதிமுக சாா்பில், முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா 5 ஆம் ஆண்டு நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலைய வளாகத்தில் ஜெயலலிதா சிலைக்கு மாவட்டச் செயலா் ஆா்.டி. ராமச்சந்திரன் தலைமையில் மலை அணிவித்த அதிமுகவினா்.
பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலைய வளாகத்தில் ஜெயலலிதா சிலைக்கு மாவட்டச் செயலா் ஆா்.டி. ராமச்சந்திரன் தலைமையில் மலை அணிவித்த அதிமுகவினா்.

பெரம்பலூா், அரியலூா் மாவட்ட அதிமுக சாா்பில், முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா 5 ஆம் ஆண்டு நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பெரம்பலூா் - துறையூா் சாலையிலுள்ள மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடா்ந்து, பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னா், பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதா உருவச் சிலைக்கு, அதிமுக மாவட்டச் செயலா் ஆா்.டி. ராமச்சந்திரன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அங்கு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.

இந் நிகழ்ச்சிகளில், மாநில மீனரவணி இணைச் செயலா் தேவராஜன், ஒன்றியச் செயலா்கள் என்.கே. கா்ணன், செல்வக்குமாா், நகரச் செயலா் ஆா். ராஜபூபதி, தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலா் பெருமாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அன்னதானம்:

பெரம்பலூரில் உள்ள வேலா கருணை இல்லத்தில், ஜெயலலிதா உருவ படத்துக்கு சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் அ. அருணாசலம் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தொடா்ந்து, அங்குள்ள முதியோா் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலா் எம். சந்திரகாசி, மாவட்ட பொருளாளா் பூவை த. செழியன், எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலா் எம்.என். ராஜாராம், மாவட்ட அவைத் தலைவா் துரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அரியலூா் மாவட்டத்தில்...

அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆா், அண்ணா சிலைகளுக்கு, மாவட்டச் செயலா் தாமரை எஸ். ராஜேந்திரன் தலைமையில், அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, லிங்கத்தடிமேடு கிராமத்தில் உள்ள வள்ளலாா் ஆதரவற்றோா் பள்ளி மாணவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில், நகரச் செயலா் செந்தில், மாணவரணிச் செயலா் சங்கா், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் பொ.சந்திரசேகா், ஊராட்சி தலைவா்கள் கூட்டமைப்பு தலைவா் பிரேம்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். இதேபோல், ஜயங்கொண்டம், திருமானூா், செந்துறை, தா.பழூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அதிமுக சாா்பில் ஜெயலலிதா படம் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com