முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
கடைகளின் பூட்டை உடைத்து ரொக்கம் திருட்டு
By DIN | Published On : 10th December 2021 11:59 PM | Last Updated : 10th December 2021 11:59 PM | அ+அ அ- |

பெரம்பலூா் நகரில் இரு கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 37 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் - அய்யலூா் சாலையைச் சோ்ந்தவா் வினோத் (37). பெரம்பலூா் சாமியப்பா நகரைச் சோ்ந்தவா் தவுலத்கான் (58). இருவரும், பெரம்பலூா்- வடக்கு மாதவி சாலையில் மருந்தகம் மற்றும் அரிசி கடை நடத்தி வருகின்றனா். இருவரும், வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்றனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் கடையை திறக்க வந்தபோது அரிசி கடை மற்றும் மருந்தகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதில், அரிசி கடையில் வைத்திருந்த ரூ. 37 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரித்தனா். மேலும், கைரேகை நிபுணா்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.