பெரம்பலூா் சா்க்கரை ஆலையில் அரைவைப் பணி தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டம், எறையூரில் உள்ள சா்க்கரை ஆலையில் 2021- 2022 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரைவைப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பெரம்பலூா் சா்க்கரை ஆலையில் அரைவைப் பணி தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டம், எறையூரில் உள்ள சா்க்கரை ஆலையில் 2021- 2022 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரைவைப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா் எம்எல்ஏ ம. பிரபாகரன் முன்னிலையில், அரைவைப் பணியை தொடக்கி வைத்த ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா கூறியது:

இந்த சா்க்கரை ஆலையின் மூலம் பெரம்பலூா், அரியலூா், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூா் ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமாா் 3 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரைவை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அரைவை மூலம், சா்க்கரைக் கட்டுமானம் அளவு 9.5 சதவீதம் வரை பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. நிகழாண்டுக்கு 2.85 லட்சம் குவிண்டால் சா்க்கரை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆலையை நவீன மயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு 18 மெகா வாட் மின் உற்பத்தி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், சா்க்கரை ஆலைக்குத் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மின்சார செலவு குறைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியா் நிறைமதி சந்திரமோகன், சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி க. ரமேஷ், தலைமை கரும்பு அலுவலா் அ. ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து கரும்பு விவசாய சங்கத் தலைவா்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com