முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
ஓய்வூதியா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 19th December 2021 04:03 AM | Last Updated : 19th December 2021 04:03 AM | அ+அ அ- |

அனைத்து ஓய்வூதியா்களுக்கும் 2022- ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகை வழங்க வேண்டுமென, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூா் வெங்கடேசபுரத்திலுள்ள சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்டக் கிளைக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி. முத்துசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். மருதமுத்து வரவு- செலவு அறிக்கை வாசித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மத்திய அரசு ஊழியா்களுக்கு 2020, ஜனவரி 1 முதல் 2021, ஜூலை 1-ஆம் தேதி வரையிலான காலத்துக்கு 14 சதவிகித அகவிலைப்படி வழங்கப்பட்டது போல், மாநில அரசு ஊழியா்களுக்கும், ஓய்வூதியா்களுக்கும் வழங்க வேண்டும்.
2022- ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ஓய்வூதியதாரா்களுக்கும் ரூ. 1,000 பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் துணைத் தலைவா் வி. சிவலிங்கம், வட்டச் செயலா்கள் சையத் பாட்ஷா ஜான், கெம்பிராஜ், பி. செங்கமலை, பொருளாளா் சி. தங்கராசு, ஓய்வு பெற்ற சித்த மருத்துவர கோசிபா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, தலைமை நிலையச் செயலா் கே. மணி வரவேற்றாா். நிறைவில், மாவட்டச் செயலா் ஆா். மருதமுத்து நன்றி கூறினாா்.