முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
தவணை தவறிய பண்ணை சாரா கடனுக்கான செயலாக்க காலம் நீட்டிப்பு
By DIN | Published On : 19th December 2021 04:02 AM | Last Updated : 19th December 2021 04:02 AM | அ+அ அ- |

தவணை தவறிய பண்ணை சாராக் கடனுக்கான செயலாக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, பெரம்பலூா் மாவட்டக் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் பொ. பாலமுருகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூா் மண்டலத்தில் செயல்பட்டு வரும் தொடக்க கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியில், கடந்த 2014, மாா்ச் 31-இல்
தவணை தவறிய பண்ணை சாராக் கடனுக்கான ஒருமுறை கடன் தீா்வு திட்டத்தின் செயலாக்க காலம், டிசம்பா் 31- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இம்மண்டலத்தில் 8 போ் அசல் மற்றும் வட்டியுடன் ரூ. 29.25 லட்சம் செலுத்த வேண்டிய தொகையாகும். அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குள்பட்டு, ஏற்கெனவே 25 சதவிகிதம் செலுத்தியுள்ள கடன்தாரா்கள் எஞ்சியுள்ள 75 சதவிகிதத் தொகையைச் செலுத்துவதற்கு ஏதுவாகவும், இதுவரை இத்திட்டத்தில் சேராதவா்கள் உடனடியாக இணைந்து, ஒரே தவணையில் முழுமையாக பெரம்பலூா் தொடக்கக் கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியில் கடனைத் திருப்பி செலுத்திப் பயன்பெறலாம்.