முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 19th December 2021 11:44 PM | Last Updated : 19th December 2021 11:44 PM | அ+அ அ- |

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முஹம்மது இக்பால் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத்தலைவா் முகமது பாரூக், மாவட்டச் செயலா் அகமது இக்பால், மாவட்ட பொருளாளா் ஜியாவுதீன் அஹமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்ற பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் தலைவா் அபுதாஹீா், முன்னாள் மாவட்டத் தலைவா் அபுபக்கா் சித்திக் ஆகியோா், எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநிலச் செயலா் கே.எஸ். ஷான் கொலையைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் பேசினா்.
தொடா்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.
இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஷாஜகான், முகமது இப்ராஹிம், முகமது அலி, தொகுதிச் செயலா் சித்திக் பாஷா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மாவட்ட பொதுச் செயலா் முகமது ரபீக் வரவேற்றாா். மாவட்டச் செயலா் அப்துல் கனி நன்றி கூறினாா்.