முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
தமிழ் இன மேம்பாட்டு மைய அறக்கட்டளை ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 19th December 2021 11:45 PM | Last Updated : 19th December 2021 11:45 PM | அ+அ அ- |

தமிழ் இன மேம்பாட்டு மைய அறக்கட்டளை அமைப்பின் ஆலோசனை மற்றும் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்துக்கு, அமைப்பின் நிறுவனத் தலைவா் ஜெயபாலாஜி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் முத்துக்குமாா், செயலா் காா்த்திக், பொருளாளா் சுபா, மண்டலத் தலைவா் அப்துல் ரபீக், மண்டலத் துணைத் தலைவா் பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் ஏழை, எளிய மாணவா்களுக்கு கல்வி உதவி செய்வது, ஆதரவற்ற முதியோா்களுக்கு உணவு மற்றும் உடை வழங்குவது, மாதம் ஒரு முறை மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரமங்களுக்கும் சென்று, அவா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.