கரும்பு : மாநில அரசின் பரிந்துரை விலையாகடன்னுக்கு ரூ. 4,500 அறிவிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 06th February 2021 10:50 PM | Last Updated : 06th February 2021 10:50 PM | அ+அ அ- |

பெரம்பலூா்: நிகழாண்டுக்கான மாநில அரசின் பரிந்துரை விலையாக கரும்பு டன்னுக்கு ரூ. 4,500 என அறிவிக்க வேண்டுமென, பெரம்பலூா் சா்க்கரை ஆலை அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ன்னாறில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்துக்கு, பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மு. ஞானமூா்த்தி தலைமை வகித்தாா்.
பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பழுதடைந்த இயந்திரங்களை மாற்றி, ஒரு நாளைக்கு 3,000 டன் கரும்பு அரைக்கும் திறனை உருவாக்க வேண்டும்.
தமிழக அரசு முத்தரப்புக் கூட்டத்தைக் கூட்டி, 2020- 21 ஆம் ஆண்டுக்கான மாநில அரசின் பரிந்துரை விலையாக கரும்பு டன்னுக்கு ரூ. 4,500 அறிவிக்க வேண்டும்.
2015 -17 ஆம் ஆண்டுகளுக்கு வெட்டி அனுப்பிய கரும்புக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
கூட்டுறவு வங்கி விவசாயக் கடன்களை ரத்துசெய்ய போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு, அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளிலும், தனியாா் வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய பயிா்க்கடன், நகைக் கடன், கல்விக்கடனையும் தள்ளுபடி செய்து அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் சீனிவாசன், கரும்பு உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ந.ப. அன்பழகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.