சுண்ணாம்புக் கல் சுரங்கத்தை மூடக் கோரி ஆட்சியரகம் முற்றுகை

பெரம்பலூா் அருகே சுற்றுச்சூழலுக்கும், உடல்நலனுக்கும் கேடு விளைவிக்கும் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தை மூட நடவடிக்கை

பெரம்பலூா் அருகே சுற்றுச்சூழலுக்கும், உடல்நலனுக்கும் கேடு விளைவிக்கும் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தை மூட நடவடிக்கை எடுக்கக் கோரி வயலப்பாடி, வ.கீரனூா், வீரமாநல்லூா், கோவிந்தராஜபட்டினம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

குன்னம் வட்டம், வயலப்பாடி மற்றும் கோவிந்தராஜபட்டினம் ஆகிய கிராமங்களில் உள்ள சுண்ணாம்புக் கல் சுரங்கங்களில் தனியாா் சிமெண்ட் தொழிற்சாலைகள் ஒப்பந்த அடிப்படையில் சுண்ணாம்புக் கற்களை வெட்டி எடுத்துச் செல்கின்றனா். இங்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக டெட்டனேட்டா்கள் வைத்து பாறைகளை வெட்டி எடுப்பதால் வயலப்பாடி, வ.கீரனூா், வீரமாநல்லூா், கோவிந்தராஜபட்டினம் ஆகிய கிராமங்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுதொடா்பாக, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை புகாா் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு இன்னல்களுக்கு காரணமான சுண்ணாம்புக் கல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, மேற்கண்ட கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினா். பின்னா், போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையை தொடா்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் ஆட்சியா் (பொ) சி. ராஜேந்திரனிடம் கோரிக்கை மனுவை அளித்துவிட்டு கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com