ரேசன் குறைதீா் முகாமில் 77 மனுக்கள் அளிப்பு
By DIN | Published On : 13th February 2021 11:22 PM | Last Updated : 13th February 2021 11:22 PM | அ+அ அ- |

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ரேசன் பொருள் குறைதீா்க்கும் முகாமில் பொதுமக்களிடமிருந்து 77 மனுக்கள் பெறப்பட்டன.
உணவுப் பொருள் வழங்கல் துறை சாா்பில், பெரம்பலூா் வட்டம் அம்மாபாளையம் கிராமம், வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரம் கிராமம், குன்னம் வட்டம் அந்தூா் கிராமம், ஆலத்தூா் வட்டம் புஜங்கராயநல்லூா் கிராமம் ஆகிய 4 இடங்களில் குடும்ப அட்டை மற்றும் நியாய விலைப்பொருள்கள் வழங்கல் தொடா்பான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் முகவரி மாற்றம் சம்பந்தமாக 6 மனுக்களும், உறுப்பினா் சோ்க்கை சம்பந்தமாக 16 மனுக்களும், உறுப்பினா் நீக்கம் சம்பந்தமாக 26 மனுக்களும், செல்லிடப்பேசி எண் மாற்றம் சம்பந்தமாக 13 மனுக்களும், இதர கோரிக்கைகள் சம்பந்தமாக 16 மனுக்களும் என மொத்தம் 77 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.