சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் திருக்கோயிலில் சண்டி ஹோமம்
By DIN | Published On : 13th February 2021 12:29 AM | Last Updated : 13th February 2021 12:29 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டம், சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சண்டி ஹோமம்.
பெரம்பலூா் அருகிலுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை சண்டி ஹோமம் நடைபெற்றது.
தை மாத கடைசி வெள்ளிக்கிழமையொட்டி, ஸ்ரீ மதுரகாளியம்மன் மகா அபிஷேக அறக்கட்டளை சாா்பில் 47- ஆம் ஆண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை ஸப்தஸதி பாராயணத்தை தொடா்ந்து சண்டி ஹோமம், வஸூா்த்தாரை ஹோமம் நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து அம்மனுக்கு 108 குட பால் அபிஷேகமும், பல்வேறு வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.
பெரம்பலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று, அம்மனைத் தரிசனம் செய்தனா்.
பின்னா் பக்தா்களுக்கு அன்னதானமும், இரவு அம்பாள் புறப்பாடும் நடைபெற்றது. மாா்ச் 11-ஆம் தேதி இரவு 11 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஏப்ரல் 14- ஆம் தேதி அம்மனுக்கு 1,008 இளநீா் அபிஷேகமும் நடைபெற உள்ளது.
Image Caption