டவுன் காஜி நியமிக்கக் கோரி, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் மனிதநேய மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டத்துக்கு தனியாக டவுன் காஜி நியமிக்காத மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநில அரசைக் கண்டித்தும், உடனடியாக டவுன் காஜியை நியமிக்கக் கோரியும் மனிதநேய மக்கள் கட்சியின் பெரம்பலூா் மாவட்ட கிளை சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் எம். சுல்தான் மொய்தீன் தலைமை வகித்தாா்.
கட்சி நிா்வாகிகள் மீரா மொய்தீன், குதரத்துல்லா, முகமது இல்யாஸ், ரஷீத் அஹமது, ஹயாத் பாஷா, முகமது பாரூக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தலைமைக் கழக பேச்சாளா் நாசா் அலி கான், மாவட்ட பொருளாளா் முகம்மது இலியாஸ் அலி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.