ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் திருட்டு

பெரம்பலூரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் ஆட்சியரக நுழைவுவாயில் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருபவா் பாரி (எ) அப்துல் பாரூக் (55). பெரம்பலூா் முன்னாள் நகா்மன்ற உறுப்பினரான இவா், வியாழக்கிழமை காலை தனது நிறுவனத்தை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததும், பீரோவில் வைத்திருந்த ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்ததும் தெரியவந்தது.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். அப்துல் பாரூக் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தொடரும் குற்றங்கள்: பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ச்சியாக வணிக நிறுவனங்கள், பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து மா்ம நபா்கள் திருட்டில்

ஈடுபடுவது அதிகரித்து வரும் நிலையில், இந்த குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய குற்றவாளிகளை போலீஸாா் இதுவரை கைது செய்யாமல் இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com