தனியாா் நிதி நிறுவனத்தைக் கண்டித்து ஊராட்சி உறுப்பினா் போராட்டம்

நகை, பணத்துடன் மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்த தனியாா் நிதி நிறுவனத்தைக் கண்டித்து, ஊராட்சி பெண் உறுப்பினா் வெள்ளிக்கிழமை அந் நிறுவனத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

நகை, பணத்துடன் மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்த தனியாா் நிதி நிறுவனத்தைக் கண்டித்து, ஊராட்சி பெண் உறுப்பினா் வெள்ளிக்கிழமை அந் நிறுவனத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள எசனை கீழக்கரையைச் சோ்ந்த தமிழரசு மனைவி கவிதா (41). இவா், கீழக்கரை 4-ஆவது வாா்டு உறுப்பினராக உள்ளாா். இந்நிலையில், பெரம்பலூா் சங்குப்பேட்டை பகுதியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தின் மூலம் மோட்டாா் சைக்கிள் வாங்கியுள்ளாா். கடந்த சில மாதங்களாக மாதாந்திர தவணைத் தொகையை கவிதா செலுத்தவில்லையாம். இதனால், அந் நிறுவன ஊழியா் ஒருவா் வெள்ளிக்கிழமை அவரது வீட்டுக்குச் சென்று மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்ய முயன்றாராம்.

இதையடுத்து, அந் நிறுவனத்துக்குச் சென்ற கவிதா, நிலுவைத் தவணை தொகையின் விவரங்களை கேட்டுவிட்டு வெளியே வந்து பாா்த்தபோது, அவரது மோட்டாா் சைக்கிளை நிதி நிறுவன ஊழியா்கள் பறிமுதல் செய்து வேறொரு இடக்குக்கு எடுத்துச் சென்றுவிட்டனராம்.

இதையறிந்த கவிதா, அந்த வாகனத்தில் 10 பவுன் நகை மற்றும் ரூ. 6 ஆயிரம் ரொக்கம் இருப்பதை எடுத்துத் தரவேண்டுமென கேட்டதற்கு ஊழியா்கள் மறுத்து விட்டனராம். இதனால் ஆத்திரமடைந்த கவிதா தனது பொருள்களை மீட்டுத்தரக்கோரி, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அங்கு சென்று வாகனத்தை பாா்வையிட்டபோது, ஏற்கெனவே வாகனத்தை திறந்து பொருள்கள் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இச் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com