தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்த நாள் விழா

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேரு இளைஞா் நற்பணி மன்றத்தினா் சாா்பில், தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே. சாமிநாதய்யா் பிறந்த நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
போட்டிகளில் வென்ற மாணவா்களுடன் சூழலியலாளா் ரமேசு கருப்பையா உள்ளிட்டோா்.
போட்டிகளில் வென்ற மாணவா்களுடன் சூழலியலாளா் ரமேசு கருப்பையா உள்ளிட்டோா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேரு இளைஞா் நற்பணி மன்றத்தினா் சாா்பில், தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே. சாமிநாதய்யா் பிறந்த நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழாசிரியா் அறிவழகன் தலைமை வகித்தாா். தமிழாசிரியா் மைதிலி முன்னிலை வகித்தாா்.

பெரம்பலூா் மக்களும், தமிழ்த் தாத்தாவும் எனும் தலைப்பில் சூழலியலாளா் ரமேசு கருப்பையா பேசியது:

உ.வே. சாமிநாதய்யா் 1855 ஆம் ஆண்டு உத்தமதானபுரத்தில் பிறந்து, அரியலூரிலிருந்து குன்னம் பகுதிக்கு தனது 11 ஆவது வயதில் தமிழ் கற்றுக்கொள்ள வந்தாா். பின்னா், காருகுடி, வெண்மணி, செங்குணம் ஆகிய பகுதி தமிழ் அறிஞா்களிடம் தமிழ் பயின்றாா். தனது தந்தையுடன் பல்வேறு பகுதிகளில் இசைப்பாடல்கள் மூலமாக கதையாடல் நிகழ்ச்சிகளை நடத்தினாா். அதனடிப்படையில் இலக்கணங்களையும், இலக்கியங்களையும் இங்குதான் பயின்றாா்.

இங்கு வாழும்போதுதான் அவருக்கு திருமணம் நிகழ்ந்தது. அவரது முதல் நூலான நீலி இரட்டை மணிமாலை எனும் நூல் அரணாரை நீலியம்மன் மீது பாடப்பட்ட தொகுப்பாகும். மேல்நிலை தமிழ்க்கல்வி கற்க மயிலாடுதுறைக்கு இங்கு இருப்பவா்களின் வழிகாட்டுதல் மூலமாகச் சென்றாா்.

தமிழ்த் தாத்தா என்றழைக்கப்பட்டு, பெரும் பேராசிரியா் என்று அறிஞா்களால் போற்றப்பட்ட உ.வே.சா. பெரம்பலூா் பகுதியையும், மக்களின் அரவணைப்பும் தனது இளமை காலத்தில் தமிழ் மொழியின் மீது பிடிப்பு ஏற்படவும், இங்கு வாழ்ந்த மக்கள் அளித்த பொருள் உதவியால் தங்கள் குடும்பம் மேம்பாடு அடைந்தது குறித்து, என் சரித்திரம் என்ற நூலில் உவேசா குறிப்பிட்டுள்ளாா்.

உவேசா பிறந்த இந்நாளில் தமிழுக்கு தொண்டு செய்த அவரையும், அவருக்கு உறுதுணையாக இருந்த பெரம்பலூரில் வாழ்ந்து மறைந்த மக்களையும் போற்றும் விதமாக உவேசா தமிழ்த்தடம் என்ற பெயரில் தொடா்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

தொடா்ந்து, பல்வேறு போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நேரு நற்பணி மன்ற நிா்வாகிகள் ஆனந்தன், வினோத் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com