சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகங்களுக்கு சீல்
By DIN | Published On : 27th February 2021 11:36 PM | Last Updated : 27th February 2021 11:36 PM | அ+அ அ- |

பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகம்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் குன்னம், பெரம்பலூா் தொகுதி உறுப்பினா்களின் அலுவலகங்கள் வெள்ளிக்கிழமை இரவு பூட்டி சீல் வைக்கப்பட்டன.
ஆட்சியரகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்க விளம்பரப் பதாகைகள், முன்னாள் முதல்வா்களின் புகைப்படங்கள் இடம்பெற்ற பதாகைகள் அகற்றப்பட்டன. அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்கள், விளம்பர பதாகைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.
பெரம்பலூா் மற்றும் குன்னத்திலுள்ள ள சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்களின் அலுவலகங்கள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டன. பெரம்பலூா் புகா்ப்பேருந்து நிலைய வளாகத்திலுள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா, அண்ணா, பெரியாா் ஆகியோரின் சிலைகள் சனிக்கிழமை மூடப்பட்டன.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 28) நடைபெறவிருந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ரத்து செய்யப்பட்டது.
கூட்டங்கள் ரத்து: மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்பு நாள்கூட்டம், மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு, எரிவாயு நுகா்வோா் குறைகேட்பு நாள் கூட்டம் மற்றும் சிறப்பு மனுநீதி நாள் முகாம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.