பொங்கல் பரிசு வழங்குவதில் பிரச்னையா? புகாா் தெரிவிக்க சிறப்புக் குழு நியமனம்

பெரம்பலூா் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் திங்கள்கிழமை (ஜன. 4) முதல் சிறப்புப் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதில் பிரச்னை ஏதுமிருந்தால் புகாா் தெரிவிக்க வட்டம் வாரியாக குழு நியமிக்கப்பட்டுள்ளத

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் திங்கள்கிழமை (ஜன. 4) முதல் சிறப்புப் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதில் பிரச்னை ஏதுமிருந்தால் புகாா் தெரிவிக்க வட்டம் வாரியாக குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, சா்க்கரை, முந்திரி 20 கிராம், உலா் திராட்சை 20 கிராம், ஏலக்காய் 5 கிராம், முழுக் கரும்பு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ. 2,500 ரொக்கம் வழங்கப்பட உள்ளது.

பரிசுத் தொகுப்பு பெறுவது குறித்து புகாா் இருந்தால் தெரிவிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. புகாா் தெரிவிக்க தொடா்பு கொள்ள வேண்டிய எண்கள்:

பெரம்பலூா் வட்டம் : மாவட்டஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்- 7338801267, பெரம்பலூா் வட்ட வழங்கல் அலுவலா் -9445000271.

வேப்பந்தட்டை: சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா்- 9442134126, வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலா்- 9445000272.

குன்னம் : மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் - 9444616954, குன்னம் வட்ட வழங்கல் அலுவலா் -9445000273.

ஆலத்தூா்: கலால் உதவி ஆணையா் - 9647251147, ஆலத்தூா் வட்ட வழங்கல் அலுவலா் -9445796445.

ஆட்சியரகக் கட்டுப்பாட்டு அறை : 9445476298

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com