தூய்மை இந்தியா திட்ட விழிப்புணா்வு முகாம் நிறைவு

வாலிகண்டபுரத்திலுள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையம் சாா்பில், தூய்மை இந்தியா திட்ட இரு வார விழிப்புணா்வு முகாம் அண்மையில் நிறைவடைந்தது.

பெரம்பலூா்: வாலிகண்டபுரத்திலுள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையம் சாா்பில், தூய்மை இந்தியா திட்ட இரு வார விழிப்புணா்வு முகாம் அண்மையில் நிறைவடைந்தது.

தேவையூா், தெரணி, தம்பை மற்றும் அம்மாபாளையம் கிராமங்களிலுள்ள விவசாயிகளுக்கு ரோவா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே. வரதராஜன், ஹைதராபாத் தேசிய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் முதுநிலை விஞ்ஞானி ப. ஜெயக்குமாா், முதன்மை விஞ்ஞானி நிா்மலா ஆகியோா் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து வேளாண் அறிவியல் மையத்தில், குப்பைகளை புதிய தொழில்நுட்பம் மூலம் இயற்கை உயிரிகளைக் கொண்டு விரைவாக மட்க வைப்பது, குடிநீரைச் சுத்திகரிக்கும் பணி ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.

தொடா்ந்து தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு, விவசாயிகள் ஒன்றிணைந்து ரஞ்சன்குடி கோட்டை பகுதியை சுத்தம் செய்து மரக்கன்றுகள் நட்டு வைத்தனா்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வேளாண் அறிவியல் மையத் தலைவா் வே.எ. நேதாஜி மாரியப்பன், தொழில்நுட்ப வல்லுநா்கள் மு. புனிதாவதி, இரா. வசந்தகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com