வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி நாளை (ஜன.5) சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டம்

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, திருமாந்துறை சுங்கச் சாவடியை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவதென எஸ்டிபிஐ கட்சி முடிவு செய்துள்ளது.

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, திருமாந்துறை சுங்கச் சாவடியை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவதென எஸ்டிபிஐ கட்சி முடிவு செய்துள்ளது.

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முஹம்மது ரபிக் தலைமை வகித்தாா்.

மாநிலச் செயலா் அபுபக்கா் சித்திக் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், கட்சியின் செயல்பாடுகள் குறித்து விளக்கியும் பேசினாா்.

கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவா் முஹம்மது பாருக், மாவட்டச் செயலா்கள் ஷாஜஹான், முஹம்மது பிலால், பொருளாளா் ஜியாவுதீன் அஹமது, செயற்குழு உறுப்பினா்கள் முஹைதீன் பாருக், அகமது இக்பால், அஸ்கா் அலி, சையது அபுதாஹிா், முஹம்மது இப்ராஹிம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com