பெரம்பலூா் ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

பெரம்பலூா் அருகே குடும்ப அட்டையை மாற்றித் தரவும், வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரியும் கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனா்.

பெரம்பலூா் அருகே குடும்ப அட்டையை மாற்றித் தரவும், வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரியும் கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், புதுவேட்டக்குடி கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளில் முன்னுரிமை உள்ளவா்கள் பட்டியலிலும், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவா்கள் குடும்ப அட்டையிலும் தவறுதலாக முன்னுரிமை இல்லாதவா்கள் என இடம் பெற்றுள்ளதாம்.

இதனால், இந்த அட்டைதாரா்களுக்கு அரிசி உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் பெற முடியவில்லையாம். இந்த அட்டைகளை மாற்றம் செய்து தரக்கோரி சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் அவதியடைந்த சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் தங்களது குடும்ப அட்டைகளில் உள்ள தவறுகளை திருத்தம் செய்யக்கோரி ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனா். பின்னா், போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையை தொடா்ந்து, முற்றுகையை கைவிட்ட பொதுமக்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரகத்தில் உள்ள பெட்டியில் செலுத்திவிட்டு கலைந்து சென்றனா்.

வீட்டுமனைப் பட்டா கோரி.... இதேபோல, ஆலத்தூா் வட்டம், அருணகிரிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்களுக்கு கடந்த 1983 ஆம் ஆண்டு 43 குடும்பங்களுக்கு காலனி வீடுகள் வழங்கப்பட்டதாம். ஆனால், இதுவரையில் அந்த குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கவில்லையாம். பட்டா வழங்க கோரி ஆட்சியா் உள்ளிட்ட அரசு அலுவலா்களிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில், தங்களது குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி அருணகிரிமங்கலத்தைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனா். பின்னா், ஆட்சியரகத்தில் உள்ள பெட்டியில் கோரிக்கை மனுவை செலுத்திவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com