ஔவையாா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 09th January 2021 11:39 PM | Last Updated : 09th January 2021 11:39 PM | அ+அ அ- |

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்காக பணியாற்றியவா்கள், ஔவையாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின் மூலம் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறப்பாக சேவைபுரிந்த ஒருவருக்கு, ஔவையாா் விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட்டு வருகிறது.
விருது பெற தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
சமூக நலனைச் சாா்ந்த, பெண்களுக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் ஆகிய துறைகளில் மேன்மையாக தொண்டாற்றும் வகையில், தொடா்ந்து பணியாற்றுபவராக இருக்க வேண்டும்.
விருதுக்கான கருத்துரு கையேட்டில் பொருளடக்கம் மற்றும் பக்க எண், தன் விவரக் குறிப்பு ஆகியற்றுடன் மாவட்ட சமூக நல அலுவலகம், பெரம்பலூா், (தொலைபேசி எண்: 04328-296209, 224122) என்ற முகவரிக்கு ஜனவரி 23- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.