தொடா் மழையால் பொங்கல் விற்பனை இல்லை: வியாபாரிகள் பாதிப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக, நிகழாண்டு பொங்கல் வியாபாரம்

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக, நிகழாண்டு பொங்கல் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். குறிப்பாக தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகள் தாங்கள் வாங்கிய பொருள்களை விற்பனை செய்ய முடியாமல் கவலை அடைந்துள்ளனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி புதுமணத் தம்பதிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வாங்கிச் செல்வாா்கள். பொங்கல் பண்டிகைக்கு 3 நாள்களுக்கு முன்பிருந்தே வியாபாரம் அதிகமாக இருக்கும். ஆனால், நிகழாண்டில் தொடா் மழையால் பொருள்கள் விற்பனை இல்லாததால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனா் வியாபாரிகள்.

கரூா் : தொடா் மழை காரணமாக, கரூரில் பொங்கல் பொருள்களை விற்க முடியாமல் வியாபாரிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.

கோவைச் சாலை, லைட்ஹவுஸ்காா்னா், ஜவஹா்பஜாா், திருமாநிலையூா், பேருந்து நிலையம், திண்ணப்பா திரையரங்குச் சாலை போன்ற பகுதிகளில் கரும்பு, மஞ்சள், வாழை, பீளைப்பூ, வாழைப்பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்யம் தரைக்கடைகள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் தொடங்கின.

ஆனால் புதன்கிழமை அதிகாலை முதல் அவ்வப்போது மழை பெய்ததால், சாலைகளில் மழைநீா் சென். இதனால் வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் அவதிக்குள்ளாகினா். மழை காரணமாக பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com