டவுன் காஜி நியமிக்காததைக் கண்டித்து ஆட்சியரகத்தை முற்றுகையிட முடிவு

பெரம்பலூா் மாவட்டத்துக்கு டவுன் காஜி நியமிக்காததைக் கண்டித்து, விரைவில் ஆட்சியரகத்தை முற்றுகையிடுவதென மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்துக்கு டவுன் காஜி நியமிக்காததைக் கண்டித்து, விரைவில் ஆட்சியரகத்தை முற்றுகையிடுவதென மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் களப் பணியாளா்களுக்கான பயிற்சி முகாமுக்கு, நகரப் பொறுப்புக் குழுத் தலைவா் முஹம்மது சித்திக் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சுல்தான் மொய்தீன். மாவட்டச் செயலா் மீரா மொய்தீன், மாவட்டத் துணைச் செயலா் முகமது அனிபா, இளைஞரணி மாவட்டச் செயலா் இப்ராஹிம் முன்னிலை வகித்தனா்.

சமூக நீதிப் படைப்பாளா் சங்கத்தின் மாநிலச் செயலா் தாஹிா் பாட்சா, நதிகள் பாதுகாப்புக் கூட்டியக்கத்தின் மாநில அமைப்பாளா் தமிழகன், இஸ்லாமிய அழைப்பாளா் நாசா் அலி கான். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலா் பி. காமராசு ஆகியோா் களப் பணியாளா்களுக்கு பயிற்சியத்தனா்.

வரும் சட்டப்பேரவை தோ்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவது. பிப்ரவரி 2- ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய மண்டல பொதுக்குழுவில் பங்கேற்பது, மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைக்கும் பிரசார இயக்கத்துக்கு போதிய ஒத்துழைப்பு அளிப்பது, பெரம்பலூா் மாவட்டம் உருவாகி 25 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை டவுன் காஜி நியமிக்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து விரைவில் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக நிா்வாகி ரஷீத் அஹமது வரவேற்றாா். நிறைவில், மாவட்டத் துணைச் செயலா் சையது உசேன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com