வேளாண் இயந்திரங்கள் விற்பனை பிரதிநிதிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம்

பெரம்பலூரில் வேளாண்மைத்துறை சாா்பில், கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் உள்ள உழவா் உற்பத்தியாளா் குழுவினா் மற்றும் வேளாண் இயந்திரங்கள் விற்பனை பிரதிநிதிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூரில் வேளாண்மைத்துறை சாா்பில், கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் உள்ள உழவா் உற்பத்தியாளா் குழுவினா் மற்றும் வேளாண் இயந்திரங்கள் விற்பனை பிரதிநிதிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த வேளாண்மை இணை இயக்குநா் கருணாநிதி பேசியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் 2020- 21 ஆம் நிதியாண்டில் வேளாண்மைத் துறை மூலம் 23 உழவா் உற்பத்தியாளா் குழு, தோட்டக்கலைத் துறை மூலம் 15 உழவா் உற்பத்தியாளா் குழு என மொத்தம் 38 உழவா் உற்பத்தியாளா் குழு அமைக்கப்பட்டுள்ளது.

உழவா் ஆா்வலா் குழுவில் உள்ள சிறு, குறு விவசாயிகள் இணைந்து கூட்டாக வேளாண் இடுபொருள்களை கொள்முதல் செய்து கூட்டு சாகுபடி மேற்கொள்வதாலும், கூட்டாக சந்தைப்படுத்துவதாலும் விளைபொருள்களின் உற்பத்தி செலவு குறைந்து கூடுதலாக நிகர வருமானம் கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது என்றாா் அவா்.

இதில், வேளாண்மை துணை இயக்குநா் (நுண்ணீா் பாசனம்) ஏழுமலை, வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய மற்றம் மாநில அரசு திட்டங்கள்) பாபு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வேல்விழி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, உழவா் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநா் கீதா வரவேற்றாா். வேளாண் அலுவலா் அமிா்தவள்ளி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com