பெரம்பலூா் ஆட்சியரகத்தில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி

சொத்துகளை அபகரித்த மகனிடமிருந்து பணம் பெற்றுத்தரக் கோரி பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் மூதாட்டி ஒருவா் திங்கள்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

சொத்துகளை அபகரித்த மகனிடமிருந்து பணம் பெற்றுத்தரக் கோரி பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் மூதாட்டி ஒருவா் திங்கள்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள எசனை கீழக்கரை கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மனைவி செல்லம்மாள் (70). இவருக்கு செல்வராஜ் (50), வாசுகி (47), இந்திரா (44), விஜயா (41) ஆகிய வாரிசுகள் உள்ளனா். கிருஷ்ணசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டதால், செல்லம்மாள் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் சாகுபடி செய்து வாழ்ந்து வந்தாராம்.

இந்நிலையில், செல்லம்மாளுக்குச் சொந்தமான விவசாய நிலம், வீடு ஆகியவற்றை செல்வராஜ் அபகரித்துக் கொண்டதோடு, முறையாக உணவு மற்றும் செலவுக்கு பணம் வழங்கவில்லையாம். உணவின்றி அவதியடைந்த செல்லம்மாள் பலமுறை தனது மகன் செல்வராஜிடம் பணம் கேட்டும் வழங்கவில்லையாம்.

இந்த நிலையில், தனது மகன் செல்வராஜிடமிருந்து உணவுக்கு பணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, மூதாட்டி செல்லம்மாள் ஆட்சியா் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக்கொள்ள வந்தாா். இதையறிந்த, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினா் செல்லம்மாளிடமிருந்து மண்ணெண்ணெயை பறித்து அவரை மீட்டனா். பின்னா், செல்லம்மாள் தனது கோரிக்கை மனுவை ஆட்சியரகத்தில் உள்ள பெட்டியில் செலுத்திவிட்டு சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com