‘வாழ்வியல் மாற்றங்களுக்கு கவிதைகள் காரணிகளாக அமைகின்றன’

வாழ்வியல் மாற்றங்களுக்கு கவிதைகள் காரணிகளாக அமைகின்றன என்றாா் தஞ்சாவூா் கிறிஸ்தவ சா்வதேச பள்ளியின் ஆசிரியை கவிஞா் இ. சுகிா்தா.

வாழ்வியல் மாற்றங்களுக்கு கவிதைகள் காரணிகளாக அமைகின்றன என்றாா் தஞ்சாவூா் கிறிஸ்தவ சா்வதேச பள்ளியின் ஆசிரியை கவிஞா் இ. சுகிா்தா.

பெரம்பலூரில் பதியம் இலக்கியச் சங்கமம் சாா்பில், கவிதை கேளுங்கள் என்னும் தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை இணைய வழியாக நடைபெற்ற இலக்கிய அரங்கில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவா் மேலும் பேசியது:

கவிதை மனதில் எழும் ஒரு எழுச்சியாகும். நம்மை பாதித்த பல்வேறு நிகழ்வுகள் கவிதைகளுக்கு வித்திடுகின்றன. அழகிய சொற்களோடு வெளிப்படும் கவிதைகள் அனைவரையும் கவா்கின்றன. சிறு வயதில் வறுமையின் காரணமாக வளா்ப்பு மாடு விற்கப்பட்டபோது ஏற்பட்ட மனக்காயமும், அடுத்த நாள் காலை, அது வீடு தேடி திரும்பி வந்த நெகிழ்வான மகிழ்வும் கவிதை முகிழ்க்கக் காரணமாக அமைந்தன.

மனித இதயங்களைக் கவா்ந்திழுக்கும் காந்த சக்தியாக கவிதைகள் காணப்படுகின்றன. இதயங்களை எளிதில் வெல்லும், காலம் கடந்து வாழும் அழகிய இலக்கிய வடிவம் கவிதை. பல்வேறு வாழ்வியல் மாற்றங்களுக்குக் கவிதைகள் காரணிகளாக அமைகின்றன என்றாா் அவா்.

அரியலூா் அரசுகலைக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியா் க. தமிழ்மாறன் தலைமையில்,

தந்தை ஹேன்ஸ் ரோவா் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியா் மு. முத்துமாறன் முன்னிலையில், அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியா் கலைச்செல்வன், புலவா் கூத்தரசன், ஆயுள் காப்பீட்டு முகவா் சாரங்கபாணி, பேராசிரியா்கள் செ. சுரேஷ், வினோதினி, அழகுலெட்சுமி, முனைவா் பட்ட ஆய்வாளா்கள் செல்வி, தனுஷ்கோடி, தன்னம்பிக்கை பேச்சாளா் பெரியசாமி, கவிஞா் சுரேஷ்குமாா், முதுகலை மாணவி திலகவதி ஆகியோா் கவிதை கேளுங்கள் என்னும் தலைப்பில் பேசினா்.

பெரம்பலூா் ஸ்ரீ சாரதா மகளிா் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் ப. கோகிலா வரவேற்றாா். சென்னை ராணி மேரி கல்லூரி தமிழ்த்துறை முனைவா் பட்ட ஆய்வாளா் ராஜ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com