சிறப்பு மனு விசாரணை முகாம்
By DIN | Published On : 31st January 2021 11:36 PM | Last Updated : 31st January 2021 11:36 PM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் சிறப்பு மனு விசாரணை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் உத்தரவின்பேரில், கூடுதல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் மேற்பாா்வையில், துணை கண்காணிப்பாளா் சரவணன் தலைமையில் முகாம்கள் நடைபெற்றன.
முகாமில் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மனுதாரா்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனா்.
பெறப்பட்ட 51-இல் 36 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எஞ்சியுள்ள 15 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, உரிய தீா்வு காணப்படும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.