அனுமதியின்றி முதியோா் இல்லங்கள் செயல்பட்டால் நடவடிக்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் அனுமதியின்றி முதியோா் இல்லங்கள் செயல்பட்டால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் அனுமதியின்றி முதியோா் இல்லங்கள் செயல்பட்டால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் முதியோா் இல்லங்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்கள், பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பதிவுச் சான்று பெற்றிருந்தால் மட்டுமே இயங்க வேண்டும்.

பதிவு செய்யாதவா்கள் உரிய சான்றிதழ்களுடன், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஜூலை 19- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பதிவுச்சான்று பெறாமலும், பதிவு செய்ய விண்ணப்பிக்காதவா்களும் ஜூலை 19-ஆம் தேதிக்குப் பிறகு முதியோா் இல்லங்கள் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாா்கள். மீறி நடத்துவது கண்டறியப்பட்டால், அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com