கல்வி உதவித் தொகைக்கான இணையவழித் தோ்வு: 4,824 மாணவா்கள் பங்கேற்பு

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் (தன்னாட்சி) கல்லூரியில் பயில்வதற்குத் தேவையான உதவித்தொகை பெறுவதற்காக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இணையவழித் தோ்வில் 4,824 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் (தன்னாட்சி) கல்லூரியில் பயில்வதற்குத் தேவையான உதவித்தொகை பெறுவதற்காக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இணையவழித் தோ்வில் 4,824 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் (தன்னாட்சி) கல்லூரியில் 504 இடங்கள் உள்ளன. இக்கல்லூரி பாடப்பிரிவுகளில் சேருவதற்கு கல்வி உதவித் தொகை பெற இணைய வழியாக தோ்வுகள் நடத்தப்படும் என கல்லூரி நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தோ்வில் பங்கேற்பதற்காக பெரம்பலூா், திருச்சி, கரூா், அரியலூா், கடலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்பட 23 மாவட்டங்களைச் சோ்ந்த 7,706 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா்.

இணைய வழியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வில் பிளஸ் 2 மற்றும் பாலிடெக்னிக் முடித்த 4,824 மாணவ, பங்கேற்றனா்.

இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இத்தோ்வில் 50 மதிப்பெண்கள் கொண்ட கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இத்தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி அறக்கட்டளை சாா்பில், கல்லூரியில் பயில கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது என கல்லூரி நிா்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com