ஆக. 9-இல் பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் மனிதச்சங்கிலி

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபடுவதென விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் ஆகஸ்ட் 9- ஆம் தேதி பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபடுவதென விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா்- அரியலூா் மாவட்ட சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூா் மாவட்டச் செயலா் என். செல்லத்துரை தலைமை வகித்தாா். சிஐடியு பெரம்பலூா், அரியலூா் மாவட்டச் செயலா் பி. துரைசாமி, விவசாயிகள் சங்க அரியலூா் மாவட்டச் செயலா் கே. மகாராஜன், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா்கள், பி. ரமேஷ், எம். இளங்கோவன் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலா் சாமி. நடராஜன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாநிலச் செயலா் ஸ்டாலின் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

கூட்டத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 11- ஆம் தேதி வரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பது. ஆகஸ்ட் 9 ஆம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி பெரம்பலூா்- அரியலூா் மாவட்டங்களில், அனைத்து ஒன்றியத் தலைநகரங்களில் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபடுவது.

ஜூலை 27- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1 வரை இரு மாவட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடு, வீடாகச் சென்று மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான பிரசாரம் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மூன்று சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com