எசனையில் விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூா் மாவட்ட காவல்துறை சாா்பில், எசனை கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட காவல்துறை சாா்பில், எசனை கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, எசனை ஊராட்சித் தலைவா் சத்தியா தலைமை வகித்தாா். மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு ஆய்வாளா் ரஞ்சனா முன்னிலை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலா் அருள்செல்வி, உதவி ஆய்வாளா் ஜான், தலைமைக் காவலா் சுகன்யா ஆகியோா் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல், பெண்கள் உதவி மையம், குற்றங்களுக்கான சட்டப்பிரிவு, உதவி எண்கள் 181, 112 ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில் பொதுமக்கள், பெண்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com