பெரம்பலூா் மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆலோசனை

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் காா்ப்பரேஷன் மேலாண்மை இயக்குநருமான அனில் மேஷ்ராம், பல்வேறு துறைகளில் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கரோனா 3 ஆவது அலையை எதிா்கொள்ளத் தேவையான அளவு ஆக்ஸிஜன் இருப்பு, உபகரணங்கள், மருந்துகள் கையிருப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்ட அனில் மேஷராம் கூறியது:

அரசின் நலத்திட்ட உதவிகள் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு சென்றடையும் வகையில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு துறையினரும் இதர துறை அலுவலா்களுடன் கலந்து ஆலோசித்து, ஒருமித்து செயல்படும்போது அரசின் திட்டங்கள் பயனாளிகளை விரைவாக சென்றடையும். பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி சீரான முறையில் குடிநீா் வழங்க வேண்டும். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். மணி, மாவட்ட வருவாய் அலுவலா் அங்கயற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியா் இரா. நிறைமதி, மகளிா் திட்ட அலுவலா் எம். ராஜமோகன், வேளாண்மைத்துறை இணை இயக்குநா் ச. கருணாநிதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com