உர விற்பனை நிலையத்தில் வேளாண் அலுவலா்கள் ஆய்வு

பெரம்பலூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் உர விற்பனை நிலையத்தில் வேளாண் அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பெரம்பலூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் உர விற்பனை நிலையத்தில் வேளாண் அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் உர விற்பனை நிலையங்களில் யூரியா 442 மெ.டன், டிஏபி 213 மெ.டன், பொட்டாஷ் 278 மெ.டன் மற்றும் கூட்டு உரங்கள் 797 மெ.டன் இருப்பு உள்ளதை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் உர விற்பனை நிலைய வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன், இப்கோ உர நிறுவனத்தின் திருச்சி மேலாளா் பரஞ்சோதி ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, ஏப்ரல் மாதத்தில் உர விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், மே மாதத்தில் மத்திய அரசு உரத்துக்கான மானிய தொகையை அதிகரித்ததால், தற்போது உரங்களை பழைய விலைக்கே அதாவது டிஏபி ரூ. 1,200, யூரியா ரூ. 266.50, இப்கோ 20:20:0:13 ரூ. 975, கிரிப்கோ 20:20:0:13 ரூ. 1,000, பொட்டாஷ் ரூ. 1,000 என்ற விலைகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் உர விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யபடுகிா என விற்பனை பட்டியலை பாா்வையிட்டனா்.

மேலும், விற்பனை முனையக் கருவியின் மூலம் உரம் இருப்பு விவரங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வின்போது சங்கச் செயலா் பிரபாகரன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com