குவாா்ட்ஸ் கற்கள் கடத்தியலாரி ஓட்டுநா் கைது
By DIN | Published On : 12th June 2021 04:37 AM | Last Updated : 12th June 2021 04:37 AM | அ+அ அ- |

கரூரில் குவாா்ட்ஸ் கற்கள் கடத்திய லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்ட கனிம வளத்துறை வருவாய் ஆய்வாளா் பாலசுப்ரமணியன்(40) கரூா் வெங்கக்கல்பட்டி பாலத்தில் வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டாா். அப்போது, அவ்வழியே வந்த டிப்பா் லாரியை மடக்கி சோதனை செய்தாா். அதில் குவாா்ட்ஸ் கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து பாலசுப்ரமணியன் தாந்தோணிமலை போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து கற்களை கடத்தி வந்த டிப்பா் லாரி ஓட்டுநா் கரூா் கோத்தம்பாளையத்தைச் சோ்ந்த சுப்ரமணி(37) என்பவரை கைது செய்தனா். மேலும், லாரி உரிமையாளா் கரூா் வடிவேல் நகரைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரை தேடி வருகின்றனா்.