பணி வழங்க மறுத்த ஊராட்சித் தலைவா் மீது புகாா்

பெரம்பலூா் அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி வழங்க மறுக்கும் ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் தொழிலாளா்கள் சனிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

பெரம்பலூா் அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி வழங்க மறுக்கும் ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் தொழிலாளா்கள் சனிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

ஆலத்தூா் வட்டம், மேலமாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மலைக்குறவா்கள், வழக்குரைஞா் சீனிவாசராவ் தலைமையில் மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியாவிடம் அளித்த மனு:

மேலமாத்தூா் ஊராட்சியில் மலைக்குறவா் இனத்தைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். முறம் பின்னுதல், கூடை முடைதல், பன்றி வளா்த்தல் உள்ளிட்ட தொழில்கள் செய்து, அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்ந்து வருகிறோம்.

தற்போது கரோனா பொது முடக்கத்தால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து, அதில் கிடைக்கும் வருவாய் கொண்டு பிழைப்பு நடத்தி வந்தோம்.

இந்நிலையில் எங்களுடைய வேலை அடையாள அட்டையை மேலமாத்தூா் ஊராட்சித் தலைவா் மணிவண்ணன் வாங்கி வைத்துள்ளாா். பலமுறை கேட்டும், அட்டையை திரும்ப தராததால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. எனவே ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை எடுத்து, எங்களுடைய அடையாள அட்டையை பெற்றுத்தர வேண்டும். மீண்டும் வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com