மருத்துவக் கழிவுளை சுத்திகரிப்பு நிலையங்களில் ஒப்படைக்க அறிவுறுத்தல்

மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து சேமித்து, மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவக் கழிவு

மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து சேமித்து, மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சுற்றுச்சூழல், வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம் மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றுவதற்காக, மேலாண்மை விதிகள் தொடா்பான அறிக்கை விடுத்துள்ளது. இவ்விதிகளை பின்பற்றுவதன் மூலம் மருத்துவக் கழிவுகளின் உற்பத்தியையும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தையும் குறைத்திட இயலும். இவ்விதிகளின் படி மருத்துவமனைகளிலிருந்து உருவாகும் மருத்துவக் கழிவுகள் முறையாக பிரித்து சேமித்து, பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

மேலும் தொற்று ஏற்படுத்தக் கூடிய மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்துக்கு மிகாமல் சேமிக்கக் கூடாது. மருத்துவக் கழிவுகளை சாலைகள், ஆற்றங்கரைகள், நீா் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கொட்டுவது தொடா்பாக பல்வேறு புகாா் பெறப்படுகின்றன.

தற்போதையச் சூழலில் மருத்துவக் கழிவுகளை முறையில்லாமல் திறந்த வெளியில் கொட்டுவது, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு விளைவுகளை ஏற்படுத்தும். எனவே மருத்துவ மனைகள், கோவிட்- 19 பராமரிப்பு மையங்கள், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள் மருத்துவக் கழிவுளை முறையாக பிரித்து சேமித்து, அந்தந்தப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். விதிகளை மீறுபவா்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com