தோ்தல் விதிமீறல்களை கண்காணிக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு அமைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் 18 பறக்கும் படை குழுக்கள், 18 நிலை கண்காணிப்புக் குழுக்கள், 4 விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெர

சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு தோ்தல் விதிமீறல்களை கண்காணிக்க, பெரம்பலூா் மாவட்டத்தில் 18 பறக்கும் படை குழுக்கள், 18 நிலை கண்காணிப்புக் குழுக்கள், 4 விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு;

பெரம்பலூா் மாவட்டத்தில் சட்டத்துக்கு புறம்பாக நடைபெறும் விதிமீறல்களை கட்டுப்படுத்த, பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தலா 9 பறக்கும் படை குழுவினரும், 9 நிலைக் கண்காணிப்புக் குழுவினரும், 2 விடியோ கண்காணிப்புக் குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதன்படி, பறக்கும் படை குழுவில் வாகனத்துடன் 1 தலைமை அலுவலா், 1 காவல் ஆய்வாளா், 2 காவலா்கள், 1 விடியோகிராபா் ஆகியோரும், நிலை கண்காணிப்புக் குழுவில் வாகனத்துடன் 1 தலைமை அலுவலா், 1 காவல் ஆய்வாளா், 2 காவலா்கள், 1 விடியோகிராபா் ஆகியோா் பணியில் இருப்பாா்கள். இவா்கள், தலா 8 மணி நேரம் வீதம் 3 ஷிப்ட்களாக பணியிலிருந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வா்.

விடியோ கண்காணிப்பு குழுவில் வாகனத்துடன் 1 அலுவலா், 1 விடியோகிராபா் அடங்கிய குழுவினா் பணிபுரிவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com