முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
பெரம்பலூரில் தோ்தல் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்
By DIN | Published On : 14th March 2021 01:11 AM | Last Updated : 14th March 2021 01:11 AM | அ+அ அ- |

பெரம்பலூரில் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைக்கிறாா் நகரப் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் கோபிநாத்.
பெரம்பலூா் இளைஞா்கள் இயக்கத்தின் சாா்பில், 100 சதவிகித வாக்குப் பதிவு மற்றும் வாக்களிக்க பணம் வாங்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம் சனிக்கிழமை தொடங்கியது.
பெரம்பலூா் வெங்கடேசபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு, பெரம்பலூா் இளைஞா்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் தி. சத்யா தலைமை வகித்தாா்.
தோ்தல் பிரிவு வட்டாட்சியா் நூா்ஜஹான், பெரம்பலூா் நகரப் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் கோபிநாத், அனைத்துக் கல்லூரி மாணவா்கள் தோ்தல் விழிப்புணா்வு தூதுவா் பேராசிரியா் வ. சந்திரமௌலி, தமிழ்ச்செம்மல் விருதுபெற்ற முனைவா் தா. மாயகிருஷ்ணன் ஆகியோா் கையெழுத்திட்டு, விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தனா்.
தொடா்ந்து இளைஞா்கள், பொதுமக்கள் பலா் இக் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து பதாகைகளில் ஆா்வத்துடன் கையெழுத்திட்டுச் சென்றனா்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை, இளைஞா்கள் இயக்க நிா்வாகிகள் என்.டி. கண்ணன், வி. பிரதீப், எஸ். சரத்குமாா், எஸ். பிரகாஷ், ஆா். அருண்பிரசாத் ஆகியோா் செய்திருந்தனா்.