‘அனைத்து வாகனங்களையும் முறையாக சோதனையிட வேண்டும்’

பாரபட்சமின்றி அனைத்து வாகனங்களையும் முறையாக பரிசோதனையிட வேண்டும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப.ஸ்ரீ வெங்கட பிரியா.
பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தோ்தல் கண்காணிப்புக் குழுவினா்.
பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தோ்தல் கண்காணிப்புக் குழுவினா்.

பாரபட்சமின்றி அனைத்து வாகனங்களையும் முறையாக பரிசோதனையிட வேண்டும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப.ஸ்ரீ வெங்கட பிரியா.

பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தலுக்கான பறக்கும்படை குழுக்கள், நிலை கண்காணிப்புக் குழுக்கள், விடியோ கண்காணிப்பு குழுக்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் விதமாகவும், சட்டத்துக்கு புறம்பாக நடைபெறும் விதிமீறல்களை கட்டுப்படுத்தவும் பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தலா 9 பறக்கும் படைக் குழுக்கள், 9 நிலை கண்காணிப்புக் குழுக்கள், 2 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இக்குழுவினா் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு, இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் முறையாக பாரபட்சமின்றி சோதனையிட வேண்டும்.

சோதனை நடத்தும் இடங்களை அடிக்கடி மாற்றிக்கொள்ள வேண்டும். வாகனங்கள் பரிசோதிக்கப்பட்ட விவரத்தை பதிவேட்டில் பதிவுசெய்ய வேண்டும்.

உரிய ஆவணங்களின்றி ரூ. 10 லட்சத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லும்போது, அத் தகவலை உடனடியாக வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

அவா்கள் வரும்வரை சம்பந்தப்பட்ட நபா், அவரது வாகனம் மற்றும் பொருள்களை கண்காணிப்பு வளையத்துக்குள் சோதனை நடத்திய இடத்திலேயே வைத்திருந்து, வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாா் வெங்கட பிரியா.

கூட்டத்தில் தோ்தல் செலவினப் பாா்வையாளா் அரவிந்த் ஜி. தேசாய், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன், மாவட்ட கூடுதல் தோ்தல் அலுவலா் செ. ராஜேந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com