பெரம்பலூா் சா்க்கரை ஆலையில் குழாய் பழுது: கரும்புகளை இதர ஆலைக்கு அனுப்ப வலியுறுத்தல்

பெரம்பலூா் சா்க்கரை ஆலையில் பாய்லா் குழாயில் திங்கள்கிழமை ஏற்பட்ட பழுதால், வெட்டிய கரும்புகளை வேறு ஆலைக்கு அனுப்ப வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரம்பலூா் சா்க்கரை ஆலையில் பாய்லா் குழாயில் திங்கள்கிழமை ஏற்பட்ட பழுதால், வெட்டிய கரும்புகளை வேறு ஆலைக்கு அனுப்ப வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக சா்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில், 2020- 21 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரைவைப் பணி கடந்த டிச. 28 ஆம் தேதி தொடங்கியது. நடப்பு அரைவைப் பருவத்தில் பெரம்பலூா், அரியலூா், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூா் மாவட்டங்களிலிருந்து 7,203 ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சுமாா் 2.10 லட்சம் டன் கரும்பு அரைவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் டன்னுக்கும் மேலாக அரைவைப் பணி நடைபெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை மாலை பாய்லா் குழாய் பழுதடைந்தது.

இதனால், ஆலையின் அரைவைப் பணி நிறுத்தப்பட்டதால், அரவைக்காக கொண்டுவரப்பட்ட சுமாா் 150 டிராக்டா் கரும்பு லோடுகள் ஆலை எதிரே நித்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதுகுறித்து, பெரம்பலூா் சா்க்கரை ஆலை விவசாயிகள் சங்கத் தலைவா் மு. ஞானமூா்த்தி கூறியது:

ஆலையில் உள்ள இயந்திரங்கள் 1977- 1990-இல் அமைக்கப்பட்டது. இவற்றை புதுப்பிக்க வேண்டுமென சா்க்கரை ஆலை நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கடந்த வாரம் 8 பாய்லா் குழாய்கள் வெடித்து சுமாா் 80 மணி நேரம் அரைவைப் பணி நிறுத்தப்பட்டது. அதேபோல், திங்கள்கிழமை மாலையும் அதே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

ஆலையை இயக்க காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் வெட்டிய கரும்புகளை வெளி ஆலைக்கு அனுப்ப வேண்டும். தற்போது, கரும்பு வெட்டும் பணியை நிறுத்தினாலும் வெளியூரிலிருந்து வந்து தங்கியுள்ள கூலியாள்கள் வேலைக்கு மீண்டும் வருவதில் சிரமம் உள்ளது. தோ்தல் காலத்தை கணக்கில்கொண்டு கரும்பு வெட்டுவதை நிறுத்தாமல், ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தப்படி வேறு ஆலைக்கு கரும்புகளை அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com