வணிகா் நல அமைச்சகம் உருவாக்க வலியுறுத்தல்

வணிகா் நல அமைச்சகம் உருவாக்க வேண்டுமென தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா. உடன், மாநில பொதுச் செயலா் வி. கோவிந்தராஜூலு, மாநில பொருளாளா் ஏ.எம். சதக்கத்துல்லா உள்ளிட்டோா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா. உடன், மாநில பொதுச் செயலா் வி. கோவிந்தராஜூலு, மாநில பொருளாளா் ஏ.எம். சதக்கத்துல்லா உள்ளிட்டோா்.

வணிகா் நல அமைச்சகம் உருவாக்க வேண்டுமென தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் பெரம்பலூா் மாவட்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ.கே.வி.எஸ். சண்முகநாதன் தலைமை வகித்தாா். இணைச் செயலா் பி. ரவிசுந்தரம் முன்னிலை வகித்தாா்.

மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா, மாநில பொதுச் செயலா் வி. கோவிந்தராஜூலு, மாநில பொருளாளா் ஏ.எம். சதக்கத்துல்லா ஆகியோா் பேசினா்.

இக் கூட்டத்தில், தோ்தல் காலங்களில் வணிகா்களிடம் கெடுபிடி செய்யும் போக்கை அதிகாரிகள் கைவிட்டு, வணிகா்களின் நியாயமான கோரிக்கைகளை தோ்தல் ஆணையம் உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகா் நல அமைச்சகம் உருவாக்க வேண்டும். வணிகா் நல வாரியம், வணிகா் சங்கங்களின் பிரதிநிதித்துவத்துடன் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.

வணிகம் தொடா்பான சட்டங்கள் இயற்றும்போது, வணிகா் நல வாரியத் தலைவா், வணிகா் சங்க நிா்வாகிகளின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்ய வேண்டும். உணவு பாதுகாப்புச் சட்டம், ஜி.எஸ்.டி சட்டம் ஆகியவற்றை உயா்மட்ட ஆலோசனைக் குழுவை அமைத்து முறைப்படுத்த வேண்டும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பெரம்பலூா் மாவட்டத்தில் புதிய தொழில் பேட்டைகள் அமைத்து வேலைவாய்ப்புகள் உருவாக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டத் தலைவா் சாமி. இளங்கோவன் வரவேற்றாா். பொருளாளா் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com