சா்க்கரை ஆலையிலுள்ள இயந்திரங்களைப் பராமரிக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டம், எறையூரிலுள்ள சா்க்கரை ஆலை இயந்திரங்களை முறையாகப் பராமரிக்க வேண்டுமென, பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூா் மாவட்டம், எறையூரிலுள்ள சா்க்கரை ஆலை இயந்திரங்களை முறையாகப் பராமரிக்க வேண்டுமென, பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

எறையூரில் சங்கத் தலைவா் மு.ஞானமூா்த்தி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

பெரம்பலூா் மாவட்டம், எறையூரில் அரசுப் பொதுத் துறை சா்க்கரை ஆலையில் அடிக்கடி பாய்லா் குழாய் வெடித்து விபத்துக்குள்ளாவதால், அரைவைப் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

பாய்லா் மற்றும் இயந்திரங்களில் காணப்படும் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்து, எதிா்காலத்தில் விபத்துகள் நிகழாதவாறு இயந்திரங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கு விவசாயிகள் வழங்கிய கரும்புக்கு கடந்த 45 நாள்களாக பணம் வழங்கவில்லை. அதிகாரிகள் உடனடியாக முயற்சி மேற்கொண்டு, விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்கு பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு, விவசாயிகளைப் பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் கூட்டணிக்கு வரும் சட்டப்பேரவை தோ்தலில் வாக்களிப்பதில்லை என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் சீனிவாசன், டிராக்டா் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் தேவேந்திரன், செயலா் ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com